MEDIA STATEMENTNATIONAL

வரலாற்றுக் கட்டிடங்களைப் பார்வையிட கட்டணம் விதிக்கப்படாது- மாநில அரசு கூறுகிறது

ஷா ஆலம், அக் 8- மாநில அரசினால் ஆர்ஜிதம் செய்யப்பட்ட வரலாற்றுப்ப் பின்னணி கொண்ட கட்டிடங்களை பொது மக்கள் பார்வையிடுவதற்கு கட்டணம் விதிக்க மாநில அரசு எண்ணம் கொண்டிருக்கவில்லை.

பராமரிப்புக் செலவின அதிகரிப்பு மற்றும் அதிக விலை கொண்ட உபகரணங்கள் காரணமாக கோல சிலாங்கூரில் உள்ள பாரம்பரிய விளையாட்டு அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்கு 3.00 வெள்ளி கட்டணம் விதிக்கப்படுவதாக கலாசாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பெர்ஹான் அமான் ஷா கூறினார்.

இது தவிர மாநில அரசினால் ஆர்ஜிதம் செய்யப்பட்ட வேறு எந்த வரலாற்றுப்பூர்வ கட்டிடத்திலும் நுழைவுக் கட்டணம் விதிக்கும் திட்டத்தை நாங்கள் கொண்டிருக்கவில்லை என்று அவர் சொன்னார்.

கிள்ளானில் உள்ள கெடோங் ராஜா அப்துல்லா மற்றும் பந்திங் இஸ்தானா பண்டார் ஆகியவை இதுவரை ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ள வேளையில் தொழுநோய் மருத்துவமனை மற்றும் டெங்கில் உள்ள ஈயக்கப்பல் ஆகியவற்றை ஆர்ஜிதம் செய்யும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கலாசாரத்தின் அடையாளம், தனித்துவம் ஆகியவற்றை பரிமறிக்கச் செய்யும் உள்நாட்டு கலைஞர்களின் பிரதான மையாக சிலாங்கூரை உருவாக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக வும் அவர்  தெரிவித்தார்.


Pengarang :