ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் விரைவில்  தொகுதிகள் சீரமைக்கப்பட வேண்டும்.  நாடாளுமன்ற உறுப்பினர் சானி ஹசான் வேண்டுகோள்

செய்தி ; சு. சுப்பையா

செமிஞ்சே.அக்.7- சிலாங்கூரில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின்   வாக்காளர்கள்   அதிகமாக அதிகரித்து விட்டனர். இங்குள்ள சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற   தொகுதிகள்   சீரமைக்கப்பட வேண்டும்.  இத்திட்டத்திற்கு எதிர்க் கட்சியினரும் ஆதரவு தர வேண்டும் என்று உலு லங்காட்  நாடாளுமன்ற  உறுப்பினர் சானி ஹம்சான் கோரிக்கையை முன் வைத்தார்.

சட்டமன்ற தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள்  உள்ள வேளையில் ,  நாடாளுமன்ற  தொகுதிகளில்  3 லட்சத்திற்கு மேற்பட்ட  வாக்காளர்கள்  இருக்கின்றனர். ஆகவே சிலாங்கூரில் உள்ள அனைத்து தொகுதிகளும் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

தொகுதியில் பல லட்சம் வாக்காளர்கள் இருப்பதால் அனைவருக்கும் சிறப்பாக சேவை வழங்குவதில் மக்கள் பிரதிநிதிகள் பெரும் சவாலை எதிர் நோக்கி வருகின்றனர். இதனால் ஒரு தரப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் அனைவருக்கும் சிறப்பாக சேவையாற்ற பெரும் பணம் செலவிட வேண்டி இருக்கிறது.

ஆனால் கெடா, கிளாந்தான், திரங்கானு, பகாங் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு சட்ட மன்றங்களிலும் 50 ஆயிரத்திற்கும் குறைவான வாக்காளர்களையே கொண்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாக சேவையாற்ற முடிகிறது.

சிலாங்கூரில் இவ்வாறு இல்லை. மக்கள் தொகை அதிகம் உள்ள  மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. ஆகவே சிலாங்கூரில் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் அனைத்து தொகுதிகளும் மறு சீரமைக்கப் பட வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் கோரிக்கை முன் வைத்தார்.

உலு லங்காட் நாடாளுமன்ற தொகுதியில் மித்ராவின் முழு ஒத்துழைப்போடு இந்திய சமுதாயத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டு நிகழ்வை மக்கள் நீதி கட்சியின் தலைவர் இராசன் முனுசாமி ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க வந்த போது மேற்கண்டவாறு இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சானி ஹம்சான் தெரிவித்தார்.


Pengarang :