ECONOMYHEALTHNATIONAL

இல்லத்தரசிகளுக்கான சொக்சோ திட்டத்தில் விரைந்து பதிவு செய்யுங்கள்! அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

கோத்தா பாரு, நவ 9-  இல்லத்தரசிகளுக்கான சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் அதிகமானோர் விரைந்து பதிந்து கொள்ளும்படி மனித வள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 1 லட்சத்து 97 ஆயிரம் இல்லத்தரசிகள் பதிந்து கொண்டுள்ளனர்.

இல்லத்தரசிகள் மத்தியில் இந்த விழிப்புணர்வு மிக குறைவாகவே இருக்கிறது. இந்த திட்டத்திற்காக அரசு இரண்டு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

அடுத்த ஆண்டுக்கு  அரசு ஐந்து கோடி ஒதுக்கப்பட்டிருக்கும் வேளையில் 4 லட்சம் இல்லத்தரசிகள் பயன் அடைவார்கள் என்று அவர் சொன்னார்.

சொக்சோ அகப்பக்கத்தில் அல்லது சொக்சோ அலுவலங்களில் நேரடியாக சென்று பதிந்து கொள்ளலாம் என்று இல்லத்தரசிகளை அமைச்சருக்கு சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று கிளாந்தான் கோத்தா பாருவில் மனித வள அமைச்சின் கீழ் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் அவர் நிருபர்களிடம் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதவள அமைச்சின் கீழ் முதல் முறையாக மக்கள் சந்திப்பு நிகழ்வு நடத்தப்பட்ட வேளையில்  பல்வேறு பிரச்சனைகள் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து விளக்கம் பெற்றனர்.

மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் சரியான சேனல்கள் மற்றும் ஏஜென்சிகளை அறிந்து கொள்ள இந்த நிகழ்வு சிறந்த தளமாக அமைந்தது.


Pengarang :