ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

7 வது முறையாக  கோத்தா டாமன்சாரா சட்ட மன்றத்தில்  ஏசான் ரஹ்மா விற்பனை சந்தை

செய்தி ; சு சுப்பையா

சுங்கை பூலோ. டிச.21-  வசதி குறைந்தவர்கள் வாழ்க்கை செலவினத்தை கட்டுப்படுத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்  இப்ராஹிம் ரஹ்மா விற்பனை சந்தையை அறிமுகப் படுத்தினார். இச்சந்தை சிலாங்கூர் அரசு இணைந்து ஏசாம் ரஹ்மா விற்பனை சந்தை என்று சிலாங்கூருக்கு அறிமுகம் செய்து வைத்து, வசதி குறைந்தவர்கள் வாழ்க்கை செலவினத்திற்கு பேருதவி செய்து வருகிறது.

கோத்தா டமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் துவான் முகமட் இசுவான் கரிம் 7 வது முறையாக  ஏசான் ரஹ்மா விற்பனை சந்தையை இங்கு  நடத்தினார்.
இந்த விற்பனை சந்தையில் பல்லின மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என்று வசதி குறைந்த அனைத்து தரப்பினரும் கலந்து பயனடைந்தனர்.

கடந்த 6 விற்பனை சந்தையில் மலாய்க்காரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  7 முறையாக கோத்தா டமன்சாரா சட்ட மன்ற தொகுதியில் நடை பெற்ற  ரஹ்மா விற்பனை சந்தையில் மலாய்க்காரர் அல்லாதாவர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். மேலும் சுங்கை பூலோ புதுக் கிராமம் இந்தியர்களும் சீனர்களும் பெரும்பான்மையாக வசிக்கும் இடம் . இந்த வசதி குறைந்தோருக்கான விற்பனை சந்தையில்  இம்முறை அதிகமாக சீனர்களும் இந்தியர்களும் கலந்துக் கொண்டு பொருட்களை வாங்கி பயனடைந்தனர்.

சிலாங்கூர் விவசாய கழகம் இந்த விற்பனை சந்தையை சிலாங்கூர் முழுவதும் சட்ட மன்றம் மற்றும் நாடாளுமன்ற அலுவலகத்தின் பேராதவோடு இந்த விற்பனை சந்தையை முறையாக நடத்தி வருகின்றனர்.

இந்த ரஹ்மா விற்பனை சந்தையில் இதுவரையில் 2,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்  என  கோத்தா டமன்சாரா சட்ட மன்ற அலுவலக அதிகாரி தெரிவித்தார்.

இந்த ஏசான் ரஹ்மா 7வது விற்பனை சந்தையிலும் இத்தொகுதியின் இந்திய சமுதாயத் தலைவர் தேவி ஏற்பாட்டுக் குழுவில் இணைந்து சேவையாற்றி வருகிறார்.

இந்த விற்பனை சந்தையில் 5 கிலோ சமையல் எண்ணை ரி.ம. 25.00, ஒரு கோழி ரி.ம. 10.00, 5 கிலோ அரிசி ரி.ம. 13.00, 30 பி கிரேட் முட்டை ரி.ம. 10.00,  இறைச்சி ஒரு கிலோ 24.00 என்று குறைந்த விலையில் விற்கப்படுகிறது. மீன், கணவாய், கிலிஞ்சல்கள் ( கிராங் ) மற்றும் சாஸ் வகைகளும் விற்கப்படுகின்றன.


Pengarang :