ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

இன்று நான்கு இடங்களில் எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டம் (JER) தொடர்கிறது.

ஷா ஆலம், ஜனவரி 21: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டு கழகத்தால் (பிகேபிஎஸ்) இயக்கப்படும் எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டம் (JER) இன்று நான்கு இடங்களில் தொடர்கிறது.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, நடைபெறும் விற்பனை விற்பனை 99 ஸ்பீட்மார்ட் 1414 ஜாலான்  தெப்பி சுங்கை (பண்டார் பாரு கிள்ளாங்) அருகில் நடைபெறும்;  அம்பாங் மேவா பொது மண்டபம் (  லெம்பா ஜெயா); உபுடியா மசூதி, பிரிவு 9 (பத்து தீகா) மற்றும் அர் ரவுடா சூராவ், சௌஜானா இம்பியன் (காஜாங்).

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ  சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இந்த மலிவு விற்பனை திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு  கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது.  மாநிலம் முழுவதும் 2,850 இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனையின் வாயிலாக  இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

இந்த விற்பனை இடங்கள் தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Pengarang :