NATIONAL

பிப்ரவரி மாதம் முழுவதும் போக்குவரத்து, பொதுவான அபராதங்களுக்கான சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் – டிபிகேஎல்

கோலாலம்பூர், பிப் 1: கூட்டரசு பிரதேச தினம் 2024  கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று முதல் பிப்ரவரி 29 வரை வெளிநாட்டினரை ஈடுபடுத்தாத போக்குவரத்து மற்றும் பொதுவான அபராதங்களுக்கான சிறப்பு தள்ளுபடியைக் கோலாலம்பூர் நகர மன்றம் (டிபிகேஎல்) வழங்குகிறது.

கார்கள், பல்நோக்கு வாகனங்கள் (MPVகள்) மற்றும் சிறிய லாரிகளுக்கு RM20, பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு RM50, மோட்டார் சைக்கிள்களுக்கு RM10 எனும் சிறப்பு விகிதத்தில் பார்க்கிங் குற்றங்கள் போன்ற போக்குவரத்து அபராதங்களுக்கு சலுகை வழங்குவதாக டிபிகேஎல் முகநூல் பதிவின் மூலம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டினரை ஈடுபடுத்தாத பிற குற்றங்களுக்குச் சிறப்பு சலுகை RM100 வழங்கப்படுகிறது.

பொருட்கள் போக்குவரத்து சட்டம் (யுயுகே) 1997 மற்றும் மொத்த விற்பனை சட்டம் 2002 ஆகியவற்றின் கீழ் உள்ள பொதுவான வழக்குகள், வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்துறை உரிமச் சட்டம் (WPKL) 2016 சட்டப் பிரிவுகள் கீழ் அனுமதியின்றி எந்த வெளிநாட்டினரும் வேலைக்கு அமர்த்துவதற்கு சிறப்பு தள்ளுப்படி வழங்கப் படாது.

ஹோட்டல் சட்டம் (WPKL) 2003, பொழுதுபோக்கு சட்டம் (WPKL) 1992, கூட்டரசு பிரத்தேச (திட்டமிடல்) சட்டம் 1982 மற்றும் சாலைகள், வடிகால் மற்றும் கட்டிடங்கள் சட்டம் 1974 இன் கீழ் கட்டிட அனுமதி தொடர்பான குற்றங்கள் ஆகியவற்றிற்கும் சிறப்பு தள்ளுப்படி சலுகை வழங்கப்படாது.

பொதுமக்கள் Pay@KL விண்ணப்பத்தின் மூலம் சரிபார்த்து பணம் செலுத்தலாம் என்று பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :