NATIONAL

 70,000க்கும் அதிகமானவர்களுக்கு RM74 மில்லியன் ஈவுத்தொகை விநியோகம்

கோத்தா பாரு, மார்ச் 29: நாடு முழுவதும் 70,000க்கும் அதிகமான பங்கேற்பாளர்களுக்கு கடந்த ஆண்டு மூன்றாவது சீசனின் RM74 மில்லியன் மதிப்புள்ள ஈவுத்தொகையை ஃபெல்க்ரா பெர்ஹாட் விநியோகித்து உள்ளது.

இதன் மூலம், ஐடில்பித்ரிக்கு தயாராகும் பங்கேற்பாளர்களின் சுமையைக் குறைக்க முடியும் என்று நம்புகிறோம் என அதன் தலைவர் டத்தோ அஹ்மட் ஜஸ்லான் யாக்கூப் கூறினார்.

“இந்த ஈவுத்தொகையின் அளவு செம்பனை எண்ணெயின் உலக சந்தை விலையைப் பொறுத்தது. இந்த மாதம் அதன் விலையை ஒப்பீட்டளவில் டன் ஒன்றுக்கு RM4,000க்கு மேல் நிலையாக இருக்கிறது.

“பங்கேற்பாளர்களுக்கு அதிக ஈவுத்தொகையை விநியோகிக்க இந்த போக்கு தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம் ” என அவர் கிளந்தான் அம்னோ பிரிவுத் தலைவர் ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறப்பு விழாவில் கூறினார்.

மேலும், 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஈவுத்தொகை அடுத்த மே மாதம் வழங்கப்படும் என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல், இரண்டு வாரங்களில் கொண்டாடப் படவிருக்கும் ஐடில்பித்ரிக்கு முன்னதாக, நீர் விநியோகப் பிரச்சனையைத் தீர்க்க உடனடி மற்றும் முழுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசைக் கேட்டுக் கொண்டார்.

“பலர் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால் நீர் நுகர்வு அதிகரிக்கும், தண்ணீர் பிரச்சனை ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை பாதிப்பதை காண நாங்கள் விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :