NATIONAL

கனமழை மற்றும் பலத்த காற்றால் மரங்கள் விழுந்ததில் 16 கார்கள் மற்றும் மூன்று வீடுகள் சேதம்

கோலாலம்பூர், மார்ச் 29: நேற்று பெய்த கனமழை மற்றும் வீசிய பலத்த காற்றால் மரங்கள் விழுந்ததில் தலைநகரைச் சுற்றி 16 கார்கள் மற்றும் மூன்று வீடுகள் கடுமையாகச் சேதமடைந்தன.

இச்சம்பவங்களின் பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்று கோலாலம்பூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

நேற்று மாலை 6 மணியளவில் பெய்ந்த கனமழை மற்றும் வீசிய பலத்த காற்றின் காரணமாகப் புக்கிட் ஜலீல் விளையாட்டு பள்ளி அருகே உள்ள புக்கிட் ஜலீல் நெடுஞ்சாலையில் மரம் விழுந்து ஐந்து கார்களையும், தாமான் தாசிக் டமாயில் இரண்டு கார்களையும் சேதப்படுத்தியது.

மேலும், ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள ஜாலான் ராடின் மற்றும் ஜாலான் ராடின் அனும் ஆகிய இடங்களில் மரங்கள் விழுந்த சம்பவம் மூன்று கார்களுக்குச் சேதம் விளைவித்தது. மேலும் இரண்டு கார்கள் வியாபாரிகளின் கூடாரங்கள் காற்றில் பறந்து வந்ததால் சேதமடைந்தன என அவர் தெரிவித்தார்.

“தாமான் கெம்பிரா, ஜாலான் குச்சாய் லாமாவில் மரம் விழுந்ததில் இரண்டு கார்கள் சேதமடைந்தன. அதே சம்பவம் ஜாலான் ஜலில் ஜெயா, புக்கிட் ஜலீலில் ஏற்பட்டு இரண்டு கார்கள் சேதமடைந்தன,” என்று அவர் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதற்கிடையில், மரம் முறிந்து விழுந்த சம்பவத்தால், பண்டார் பாரு ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள இரண்டு வீடுகளுக்கும், தாமான் சாலாக் செலாத்தானில் உள்ள ஒரு வீட்டிற்கும் சேதம் ஏற்பட்டது.

– பெர்னாமா


Pengarang :