ECONOMYMEDIA STATEMENT

உபகரண கொள்முதல், வர்த்தக விரிவாக்கத்திற்கு  ஹிஜ்ரா கடனுதவி

ஷா ஆலம், ஏப் 12- இம் மாநிலத்தில் உள்ள தொழில் முனைவோர்   தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு நிதியுதவி தேவைப்பட்டால்,  ஐ-பிஸ்னஸ் நிதித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வர்த்தக உபகரணங்கள் வாங்குவதற்கும்  வணிக வளாகங்களை புதுப்பிப்பதற்கும் தொழில் முனைவோருக்கு  50,000 வெள்ளி வரையிலான கடன் உதவி வழங்கப்படுவதாக  யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம்  (ஹிஜ்ரா)  தெரிவித்தது.

“ஐ-பிசினஸ் ஃபைனான்சிங் திட்டத்தில் 50,000  வெள்ளி வரை கடனுதவி பெற வாய்ப்பு. ஆர்வமுள்ளோர் https://mikrokredit.selangor.gov.my  எனும் அகப்பக்கம் வழி விண்ணப்பிக்கலாம்  என்று அது தனது முகநூல் பதிவில் கூறியது.

ஐ-பிஸ்னஸ் திட்டத்துடன் கூடுதலாக,  ஐ-பெர்மூசிம்  திட்டம், நியாகா டாருல் எஹ்சான்  (நாடி) திட்டம்,  கோ டிஜிட்டல் திட்டம்  மற்றும்  ஜீரோ டு ஹீரோ திட்டம் ஆகிய கடனுதவித் திட்டங்களையும் ஹிஜ்ரா அறிமுகப்  படுத்தியுள்ளது.

கடந்த 2015 முதல் மொத்தம் 79 கோடியே 70 லட்சம் வெள்ளி  59,508 ஹிஜ்ரா உறுப்பினர்களுக்கு வர்த்தகக் கடனாக வழங்கப் பட்டுள்ளதாக ஹிஜ்ரா சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ மரியா ஹம்சா கடந்த மார்ச் 20ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :