ANTARABANGSARENCANA PILIHAN

எப்பிஐ: 1எம்டிபி தொடர்பில் சாட்சியம் அளிக்க பயம், உயிருக்கு ஆபத்து

ஷா ஆலம், செப்டம்பர் 6:

அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையினர் (எப்பிஐ), 1எம்டிபி ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிக்க இருந்த முக்கிய சாட்சிகள் தற்போது தங்களுக்கு ஏதும் நடந்து விடும் என்ற பயத்தில் ஒத்துழைப்பு வழங்க மறுத்து விட்டனர்.

அனைத்துலக செய்தி நிறுவனமான புளூம்பேர்க் நியூஸ் வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ள சாட்சிகள் விசாரணையின் போது தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் ஒத்துழைப்பு கொடுத்தால் மிகவும் ஆபத்தான சூழ்நிலை உருவாகும் என்று பயப்படுவதாக கூறியது.

இதன் அடிப்படையில் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையினர் சாட்சிகளின் விவரங்களை இரகசியமாக வைக்கப்பட்டு உள்ளனர்.

FBI

 

 

 

 

அமெரிக்க நீதித்துறை கடந்த மாதம் நீதிபதியிடம் 1எம்டிபி ஊழல் தொடர்பில் சிவில் வழக்கை தள்ளிப்போட வேண்டுகோள் விடுத்துள்ளது. AS$ 1 பில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கைப்பற்றும் முயற்சி இந்த சிவில் வழக்காகும். 1எம்டிபி நிதியை மோசடிகள் விசாரணை செய்ய குற்றவியல் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நீதித்துறை, மலேசியா தொழில் அதிபர், லாவ் தேக் ஜோ அல்லது ஜோ லோ, ரீஸா அஸிஸ் மற்றும் முன்னாள் இண்டர்நேஷனல் பெட்ரோலியம் இண்வெஸ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான காடிம் அல் குபாய்ஸி போன்றவர்களின் சொத்துக்களை முடக்க முயற்சிகள் எடுத்து வருகிறது.

ஆனாலும் இவர்களின் சொத்துடமை களை பாதுகாத்து வரும் அமைப்பு, அமெரிக்கா நீதித்துறையின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

மத்திய புலனாய்வுத் துறையினரின் கூற்றுப்படி இந்த அமைப்பு தங்களின் வாதத்தில் சாட்சிகள் மற்றும் ஆவணங்களையும் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1mdb-reza-jho-lo

 

SUMBER BERITA ASAL: https://www.bloomberg.com/news/articles/2017-09-05/1mdb-stolen-funds-witnesses-are-scared-to-talk-fbi-says

TERJEMAHAN ASAL: http://www.freemalaysiatoday.com/category/bahasa/2017/09/06/saksi-bimbang-bantu-siasatan-jenayah-1mdb-kata-fbi/


Pengarang :