NATIONAL

“MyEG Services Bhd“ அதன் இணையத் தளத்தின் வழி கிடைக்கும் சேவைகளை மிகைப்படுத்தி குறிப்பிடவில்லை

கோலாலம்பூர், செப் 13 – “MyEG Services Bhd“ அதன் இணையத் தளத்தில் கிடைக்கும் சேவைகளை மிகைபடுத்தி அல்லது தவறாகக் குறிப்பிடவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

“அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி அனைத்து சேவைகளும் தொடர்ந்து வழங்கப்படுகிறது” என்று இ-சேவை வழங்குநர் இன்று  புருஷா மலேசியாவிடம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியது..

செவ்வாயன்று இரண்டு உள்ளூர் ஆங்கில செய்தி இணையதளங்களால் வெளியிடப்பட்ட “MYEG சட்டவிரோதமாக தொழிலாளர் அனுமதிகளைப் புதுப்பித்தல்” மற்றும் “MyEG ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்ட போதிலும் வெளிநாட்டு தொழிலாளர் அனுமதி களுக்கு கட்டணம் வசூலிப்பதாக கூறப்பட்டது” என்ற தலைப்பில் வெளியான செய்திக் கட்டுரைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் “MyEG“ இவ்வாறு கூறியது.

நேற்று நாடாளுமன்றத்தில் கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய் தியோங்கின் கருத்துக்களை மேற்கோள் காட்டி, மலேசிய குடிவரவுத் துறையின் ஒப்பந்தத்தை இடைநிறுத்திய போதிலும் “MyEG“ இன்று வரை சட்டவிரோதமாகத் தொழிலாளர்களின் அனுமதிகளை புதுப்பித்து வருவதாக செய்தி இணையதளங்கள் தெரிவித்தன.

“கூவின் அறிக்கை அவரது சொந்தக் கருத்து என்பதை வாரியம் தெளிவுபடுத்த விரும்புகிறது” என்று MyEG தெரிவித்துள்ளது.


Pengarang :