Exco Kesihatan, Kebajikan, Pemberdayaan Wanita dan Keluarga, Dr Siti Mariah Mahmud bergambar pada Majlis serahan Didik AnIS dan Bantuan Khas AnIS di Foyer SUK, Bangunan SSAAS, Shah Alam pada 25 Oktober 2019. Foto REMY ARIFIN/SELANGORKINI.
SELANGOR

மாற்றுத் திறனாளி குடும்பத்திற்கு ‘அனிஸ்’ நிதியுதவி!

ஷா ஆலம், அக்.25-

சிலாங்கூரில் உள்ள உடல் பேறு குறைந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் கல்வி மற்றும் சமூக நல உதவிக்காகவும் மாநில அரசாங்கம் 1 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிதியானது சம்பந்தப்பட்ட சிறார்களின் குடும்பத்தினர் அல்லது பராமரிப்பாளர்களுக்கு உதவிநிதி வழங்குவதற்காக மாநில அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையாகும் என்று சுகாதாரம், சமூகநலன், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு துறை நிரந்தர ஆட்சிக் குழு உறுப்பினர் மரியா மாஹ்முட் கூறினார்.

ஆயினும், சமூக நல இலாகாவில் பதிந்து கொண்டுள்ள சிறப்பு சிறார்களை உட்படுத்தியவர்களுக்கு மட்டுமே இந்நிதியுதவி வழங்கப்படுவதாக அவர் சொன்னார். இத்திட்டதின் மூலம் சிலாங்கூர் சிறப்பு சிறார் கல்வி கட்டண உதவித் தொகைக்கு (அனிஸ்) மாநில அரசாங்கம் 540,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :