ECONOMYPBTSELANGORSMART SELANGOR

60 விழுக்காட்டு பூர்வக்குடியினர் கிராமங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டன

ஷா  ஆலம், டிச 30- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 74 பூர்வக்குடியினர் கிராமங்களில் 60 விழுக்காட்டுப் பகுதி ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாக பூர்வக்குடியினர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஸீ லோய் சியான் கூறினார்.

எஞ்சியுள்ள கிராமங்களை ஆர்ஜிதம் செய்யும் பணி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார். பூர்வக்குடியினரின் குடியிருப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இந்நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பூர்வக்குடியினர் வசிக்கும் நிலம் அரசாங்க ரிசர்வ் நிலமாகவோ பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவோ இருக்கும் பட்சத்தில் நாம் பிரச்னையை எதிர்நோக்க வேண்டி வரும். அதுபோக, சில குடியிருப்புப் பகுதிகள் தனியாருக்குச்  சொந்தமானவையாகவும் உள்ளன என்றார் அவர்.

இது போன்ற பிரச்னைகளால் பூர்வக்குடியினரின் குடியிருப்புகளை ஆர்ஜிதம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் நீதிமன்றம் வரை செல்ல வேண்டியுள்ளது என அவர் கூறினார்.

பூர்வக்குடியினர் குடியிருப்புகளை ஆர்ஜிதம் செய்வது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்ற பணிகளுக்காக மாநில அரசு பத்து லட்சம் வெள்ளி மானியத்தை அடுத்தாண்டிலும் வழங்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் உள்ள பூர்வக்குடியினர் குடியிருப்புகளில் நில அளவைப் பணியை பூர்வக்குடியினர் மேம்பாட்டு இலாகா மேற்கொண்டு வந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோல லங்காட், உலு சிலாங்கூர், சிப்பாங், கோம்பாக், பெட்டாலிங், கோல லங்காட் மாவட்டங்களில் மொத்தம் 22 பூர்வக்குடியினர் கிராமங்கள் உள்ளன.


Pengarang :