PBTSELANGORWANITA & KEBAJIKAN

உலு சிலாங்கூர் மாவட்ட மன்ற ஏற்பாட்டில் மகளிர் தினம் அனுசரிப்பு

உலு  சிலாங்கூர், மார்ச் 8– அரசு நிர்வாகத்தில் முதுகெலும்பாக விளங்கும் மகளிரின் சேவையைப் போற்றும் வகையில் உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் அனைத்துலக மகளிர் தினத்தை இன்று கொண்டாடியது.

தீபகற்ப மலேசிய ஊராட்சி மன்ற ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டிலான இந்த மகளிர் தின நிகழ்வு எஸ்.ஒ.பி. நடைமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டதாக மாவட்ட மன்றத் தலைவர் டாக்டர் முகமது அஸார் முகமது அலி கூறினார்.

உலு சிலாங்கூர் மாவட்ட மன்றத்தின் சிறப்புகளை மாநில மற்றும் தேசிய நிலையையும் கடந்து அனைத்துலக நிலையில் பரிமளிக்கச் செய்வதில் மகளிர் ஆற்றிய பங்கினை அங்கீகரிக்கும் வகையில்  இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகள் மற்ற பெண்களுக்கும் உத்வேகத்தை தரும் வகையில் அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, குடும்பம், ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டை உருவாக்குவதில் பெண்களுக்கு உள்ள ஆற்றலை சமுதாயம் உணர்வதற்குரிய வாய்ப்பினையும் இந்த சிறப்புமிக்க தினம் ஏற்படுத்தும் என்றார் அவர்.

உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக இம்மன்றத்தில் பணிபுரியும் பெண்களும் ஆண்களுக்கு இணையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :