ECONOMYPBTSELANGOR

பண்டார் பாரு பாங்கியில் சமூக வணிக மையம்- மந்திரி புசார் திறந்து வைத்தார்

காஜாங், ஏப் 23- இங்குள்ள பண்டார் பாரு பாங்கி சமூக வணிக மையத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று திறந்து வைத்தார். இந்த வணிக வளாகம் ரமலான் முதல் நாளிலிருந்து செயல்பட்டு வருகிறது.

நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) கடைபிடிப்பது மற்றும் கடைகளுக்கு இடையே இடைவெளி உறுதி செய்வது ஆகியவற்றில் இந்த வணிக மையம் மாநிலத்திலுள்ள இதர வணிக மையங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருவதாக அவர் சொன்னார்.

இங்கு கடைபிடிக்கப்படும் நடைமுறைகள்  சிறப்பானதாக உள்ளன. எனினும், வாடிக்கையாளர்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதுவும் நமது நன்மைக்கே என்றார் அவர்.

ஒரு சந்தை எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு இந்த பண்டார் பாரு பாங்கி வணிக மையம் ஒரு அளவுகோளாகவும் எடுத்துக் காட்டாகவும் விளங்குகிது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்தையின் வருகை புரிந்து வர்த்தக நடவடிக்கைகளைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

எஸ்.ஓ.பி. விதிமுறைகளைக் கடைபிடிக்கத் தவறியதற்காக கோம்பாக், கிரீன்வூட் ரமலான் சந்தையை நான்கு நாட்களுக்கு மூட  செலாயாங் நகராண்மைக்கழகம் உத்தரவிட்டிருந்தது.

நிர்ணயிக்கப்பட்ட  நடைமுறைகளை பின்பற்றத் தவறும் ரமலான் சந்தைகள் மூடப்படும் என்றும் மந்திரி புசார் அண்மையில் எச்சரித்திருந்தார்.


Pengarang :