ECONOMYPBTSELANGOR

உணவு விநியோகத்தை உறுதி செய்ய சிலாங்கூர் விவசாய சந்தை உருவாக்கம்

ஷா ஆலம், மே 10- மாநிலத்தில் போதுமான அளவு உணவு கையிருப்பு இருப்பதையும் அது மாநிலம் முழுவதும் உள்ள மக்களிடம் சென்று சேர்வதையும் உறுதி செய்வதற்காக சிலாங்கூர் விவசாய சந்தை உருவாக்கப்பட்டுள்ளது.

பாசார் தானி சந்தைதையப் போல் இந்த சந்தையின் பங்களிப்பும் அமையும் என்று விவசாய அடிப்படை தொழில்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  இஞ்சினியர் இஹாம் ஹஷிம் கூறினார்.

கடந்தாண்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது முதல் மாநிலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருள் கையிருப்பு  போதுமான அளவு உள்ளதை மாநில அரசு உறுதிப்படுத்தி வந்துள்ளதாக அவர் சொன்னார்.

விவசாய பொருள்களை சந்தைப்படுத்துவதில் பாசார் தானியுடன் நாங்கள் போட்டியிட விரும்பவில்லை. ஆகவேதான் பாசார் தானி செயல்படும் இடங்களுக்கு வெகு தொலைவிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளிலும் இந்த விவசாய சந்தை திட்டத்தை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம் என்றார் அவர்.

தேவையின் அடிப்படையில் இந்த சந்தை சில இடங்களில் நிரந்தரமாகவும் சில இடங்களில் தற்காலிகமாகவும் நடத்தப்படுகிறது. அதே சமயம் இதன் நடவடிகைக்கள் மாதாந்திர மற்றும் வாராந்திர அடிப்டையில் அமைந்துள்ளன. இந்த சந்தைகள் நடைபெறுவது தொடர்பான அறிவிப்புகள் பாதகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக வட்டார மக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

இங்குள்ள ஷா ஆலம் அரங்கில் நடைபெறும் பாசார் தானி சந்தைக்கு வருகை புரிந்து வாடிக்கையாளர்களுக்கு விலைக் கழிவு பற்றுச்சீட்டுகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சிலாங்கூர் விவசாய சந்தை டிங்கில், பூச்சோங், பெட்டாலிங் ஜெயா, கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம், பண்டார் பாரு பாங்கி சமூக வணிக வளாகம், பாசார் தானி செலாயாங், புத்ரா ஜெயா மை ஃபார்ம் அவுட்லட்,  ஷா ஆலம் செக்சன் 13 மற்றும் 15 ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.

 


Pengarang :