ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

தொழிலாளர்கள் தடுப்பூசி பெறுவதில் செல்வேக்ஸ் திட்டம் பேருதவி-டத்தோ தெங் 

ஷா ஆலம், ஜலை 30– சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் மாநில மக்கள் தடுப்பூசி பெறுவதை விரைவுபடுத்தி நோய்த் தொற்றிலிருந்து விடுபட்ட  சமுதாயத்தை உருவாக்குவதில் துணை புரிகிறது.

உதாரணத்திற்கு, செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எனப்படும்  தொழில்துறையினருக்கான தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக முதலாளிகள் அல்லது நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி பெறும் நடவடிக்கையை விரைவுபடுத்த உதவியுள்ளதாக தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

ஆகவே, தொழில்துறையினருக்கு தடுப்பூசியை விற்பனை செய்வதன் மூலம் சிலாங்கூர் அரசு லாபம் ஈட்ட முயல்வதாக தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ நோர் ஓமார் கூறுவதில் உண்மை இல்லை என்று அவர் சொன்னார்.

இந்த தடுப்பூசித் திட்டத்தை வழி நடத்தும் நிறுவனமான செல்கேட் ஹெல்த்கேர் தடுப்பூசி மையங்களை தயார் செய்வது, பணியாளர்களை நியமிப்பது மற்றும் தடுப்பூசியை செலுத்துவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தடுப்பூசியை நாங்கள் தனியார் துறைக்கு விற்பதாக இருந்தால் அதனை வாங்கும் தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் தடுப்பூசியை செலுத்துவதற்கு தனியார் கிளினிக்குகளின் உதவியை நாட வேண்டிய அவசியம் ஏற்படும். ஆனால் எங்களின் செல்வேக்ஸ் திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் தடுப்பூசியை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட மையத்திற்கு வந்தால் போதுமானது என்றார் அவர்..

தடுப்பூசியை தொழில்துறையினருக்கு விற்பனை செய்வதன் மூலம் சிலாங்கூர் அரசு லாபம் ஈட்ட முயல்வதாக நாடாளுமன்றத்தில் நோ ஓமார் குற்றஞ்சாட்டியிருந்த து தொடர்பில் டத்தோ  தெங் இவ்வாறு குறிப்பிட்டார்.  


Pengarang :