ECONOMYMEDIA STATEMENTSELANGOR

தடுப்பூசி எதிர்ப்பாளர்களை நேரில் சந்திக்க சுகாதார அமைச்சு திட்டம்

கோலாலம்பூர், அக் 18– கோவிட்-19 தடுப்பூசி எதிர்ப்பாளர்களை நேரில் சந்திக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவ ஆய்வுகளை அடிப்படையாக க் கொண்ட கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான விளக்கத்தையும் தகவல்களையும் தரும் நோக்கில் இந்த சந்திப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மேலவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினை உட்படுத்திய இந்த சந்திப்பு நிகழ்வுக்கு தாம் ஏற்பாடு செய்வதாக துணை சுகாதார அமைச்சர் டாக்டர் நோர் அஸ்மி கூறினார்.

கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான சரியான விபரங்களை சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு வழங்க வேண்டும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்விகளின் அடிப்படையில்தான் சுகாதார அமைச்சு எந்த முடிவையும் எடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 தடுப்பூசி நோய்க்கான முழுமையான நிவாரணி அல்ல என்றும் மாறாக, அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டது என்றும் சுகாதார அமைச்சு ஏற்கனவே கூறியுள்ளது. தடுப்பூசி பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு நோய்த் தடுப்பாற்றல் குறையத் தொடங்கும் என்பதையும் ஆய்வுகள் காட்டியுள்ளன. இதன் காரணமாகவே ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றார் அவர்.

தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் யாரும் இருந்தால் அவர்களை சந்திக்க விரும்புகிறேன். இவ்விவகாரம் குறித்து நாம் விவாதிக்கலாம். உண்மை நிலையை விளக்குவதற்கு அமைச்சர் கைரியுடன் நேரில் சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்கிறேன் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :