MEDIA STATEMENTPBT

தீபாவளியை முன்னிட்டு பயன்படுத்தப்படாத பொருள்களை சேகரிக்க 27 குப்பைத் தொட்டிகள்

ஷா ஆலம், அக் 23- தீபாவளியை முன்னிட்டு பொது மக்கள் வீசக் கூடிய பயனற்ற வீட்டுத் தளவாடப் பொருள்கள் மற்றும் மின்னியல் பொருள்களை சேகரிக்க உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 27 ரோரோ வகை குப்பைத் தொட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது.

லோரிகள் மூலம் அகற்றக்கூடிய அந்த மூன்று டன் குப்பைத் தொட்டிகள் 11 இடங்களில் வரும் அக்டோபர் 24 முதல் நவம்பர் 4 ஆம் தேதி வரை வைக்கப்பட்டிருக்கும் என்று நகராண்மைக் கழகம் கூறியது.

இத்தகைய பயன்படுத்தப்படாத பொருள்களை பொது மக்கள் இந்த ரோரோ குப்பைத் தொட்டிகளில் வீசுவர் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் குத்தகையாளர்கள் குப்பைகளை எளிதாக அகற்ற முடியும் என்பதோடு சுற்றுப்புறத்தின் சுத்தம் மற்றும் சுகாதாரத்தையும் பாதுகாக்க முடியும் என அக்கழகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இந்த குப்பைத் தொட்டியில் திடக்கழிவுகளை வீசுவது முற்றாக தடை செய்யப்படுவதாகவும் அந்த  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீழ்க்கண்ட இடங்களில் அந்த குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும்.

24 hingga 29 Oktober

  1. Hulu Bernam – Jalan Changkat Asa
    2. Kalumpang – Taman Musabika
    3. Kerling – Kuil Kerling
    4. Kuala Kubu Baru – Ampang Pecah, Taman Teratai
    5. Batang Kali – Meranti 3, Taman Wawasan, Taman Semarak
    6. Ulu Yam Baru – Tapak Pasar Pagi Ulu Yam Baru
    7. Rasa – Taman Rasa Utama
    8. Serendah – Taman Tasik Teratai Fasa 2, Taman Serendah Indah, Taman Melati

30 Oktober hingga 4 November

  1. Sungai Choh – Taman Bukit Teratai, Taman Ehsan Ibu 2 dan Koskan, Kampung Mohd Taib
    2. Bukit Sentosa – Perumahan Tulip, Perumahan Tanjung, Perumahan Teluki
    3. Bukit Beruntung – Perumahan Dahlia, Perumahan Semarak, Perumahan Widuri, Perumahan Kekwa, Perumahan Inai/Melur, Perumahan Anggerik/Kemboja, Lot Banglo Anggerik/Kemboja, Perumahan Teratai

 


Pengarang :