EVENTMEDIA STATEMENTNATIONAL

RM15.3 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் – இருவர் கைது

ஷா ஆலம், மார்ச் 18- கோலா லங்காட் மற்றும் கிள்ளான் பகுதியில் 15.3 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 478.8 கிலோ கஞ்சா மற்றும் சியாபு ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரை போலீசார் கைது செய்தனர்

போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை கூறுகையில், 31 மற்றும் 47 வயதுடைய சந்தேக நபர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பகல் கோலா லங்காட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் கிள்ளானில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு போலீசாரை அழைத்துச் சென்றனர், அங்கிருந்து RM15.3 லட்சம் மதிப்புள்ள 468.8 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ சியாபு ஆகியவை கைப்பற்றியறியதாக அவர் கூறினார்.

மலேசியதாய் எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தல், இந்த மாதம் செயல்படத் தொடங்கியதாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கடத்தப்பட்ட கஞ்சா லாவோஸில் இருந்து வந்ததாக போலீசார் நம்புவதாக அயோப் கான் கூறினார்.

வழக்கமான மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்கள் கஞ்சா அறுவடை மாதங்கள். ஆனால் இப்போதெல்லாம், லாவோஸில் ஆண்டு முழுவதும் அறுவடை செய்யப்படுகிறது, அதனால்தான் சமீபகாலமாக போதைப்பொருள் தடுப்புப் போலிசாரால் கஞ்சா பறிமுதல்களை அதிகம் பார்க்கிறோம்,” என்றார்.

சமீபத்திய பறிமுதல் தொடர்பாக RM88,496 மதிப்புள்ள வாகனங்கள் மற்றும் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்ததாக அயோப் கான் கூறினார்.

இந்த வழக்கு ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படுகிறது, மேலும் சந்தேகத்திற்குரிய இருவரும் மார்ச் 22 வரை ஏழு நாள் காவலில் உள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்த அமலாக்க அதிகாரிகளின் வழக்கு குறித்து கேட்டபோது, ​​ஒன்பது அதிகாரிகளும் ஒரு மீனவரும் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களின் வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள் முடிந்துவிட்டதாகவும் கூறினார்.

மற்ற அரசு ஊழியர்களின் சாத்தியமான ஈடுபாட்டைக் கண்டறிய நாங்கள் இன்னும் தகவல்களைச் சேகரித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :