ALAM SEKITAR & CUACAECONOMYHEADERADMEDIA STATEMENT

மாநில அரசின் பரிவுமிக்க விற்பனை திட்டத்திற்கு வந்த முதல் 500 பயனிட்டாளர்களுக்கு RM10 பற்றுச் சீட்டுகள் கிடைக்கும்

அம்பாங், ஏப்ரல் 30: பாண்டான் இண்டா சட்டமன்றத்தின் மாநில அரசின் பரிவுமிக்க மெகா விற்பனைக்கு வந்த முதல் 500 பயனீட்டாளர்களுக்கு RM10 பற்றுச் சீட்டுகள் இன்று விநியோகிக்கப்பட்டன.

ஹரி ராயா பெருநாள் பொருட்கள் வாங்குவதில் மக்களின் சுமையைக் குறைக்க 5,000 ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர் இஸாம் ஹாஷிம் கூறினார்.

“பாண்டான் ஜெயா , ஜாலான் எச் பல்நோக்கு மண்டபத்தில், கம்போங் பாண்டான் மற்றும் தாமான் மெலாவத்தி உழவர் சந்தை ஆகியவற்றில் முதல் 500 பயனீட்டாளர்களுக்கு இந்தப் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டது.

மாநில அரசின் பரிவுமிக்க விற்பனைத் திட்டம் பிப்ரவரி 28 அன்று தொடங்கப்பட்டது. ஹரி ராயா பெருநாளுக்கு, சிலாங்கூர் அரசாங்கம் ஏப்ரல் 25 முதல் மே 2 வரை 29 இடங்களில் பெரிய அளவிலான விற்பனையை மேற்கொண்டது.

திட்டத்தின் மூலம், கோழி RM12, புதிய திட மாட்டு இறைச்சி (ஒரு கிலோவுக்கு RM35), தரப் பி முட்டைகள் (ஒரு பலகை RM10) மற்றும் கானாங்கெளுத்தி அல்லது செலாயாங் மீன்கள் (பேக்கிற்கு RM8) விற்கப்படுகிறது.

 


Pengarang :