PBTSELANGOR

தியாகத் திருநாளை முன்னிட்டு செந்தோசா தொகுதி மக்களுக்கு 10 ஆடுகள், 2 மாடுகள் விநியோகம்

கிள்ளான், ஜூலை 10- தியாகத் திருநாளான ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு செந்தோசா சட்டமன்றத் தொகுதி சார்பில் பத்து ஆடுகள் மற்றும் இரு மாடுகள் வழங்கப்பட்டன.

இந்த கால்நடைகள் கடந்த வெள்ளிக் கிழமை தொடங்கி கட்டங் கட்டமாக அல்-பராக்கா பள்ளிவாசலுக்கு கட்டங் கட்டமாக வழங்கப்பட்டதாக தொகுதி உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் கூறினார்.

இந்நோக்கத்திற்காக நாங்கள் 20,000 வெள்ளியை ஒதுக்கியுள்ளோம். இன்று பெருநாளைக் கொண்டாடும் முஸ்லீம் சமூகத்தினருக்கு இந்த உதவி துணை புரியும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி செந்தோசா தொகுதியிலுள்ள முஸ்லீம்களுக்கு தாம் ஹாஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.

முன்னதாக அவர், செந்தோசா தொகுதியிலுள்ளவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய 500 பொட்டலங்களை விநியோகம் செய்தார். அரிசி, தேங்காய்ப்பால், கெட்டிப்பால், சார்டின் உள்ளிட்ட பொருள்களை அந்த உணவுப் பொட்டலங்கள் கொண்டிருந்தன.


Pengarang :