ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ளத்தை எதிர்கொள்ள சுபாங் ஜெயாவில் 60 தற்காலிக நிவாரண மையங்கள் தயார்

சுபாங் ஜெயா, அக் 6- வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் 60 தற்காலிக நிவாரண மையங்களை (பி.பி.எஸ்.) சுபாங் ஜெயா மாநகர் மன்றம் தயார் செய்துள்ளது.

ஸ்ரீ கெம்பாங்கனில் 22 மையங்களும் கின்ராராவில் 15 மையங்களும் சுபாங் ஜெயாவில்10 மையங்களும் செர்டாங்கில் ஒன்பது மையங்களும் பத்து தீகா மற்றும் கோத்தா கெமுனிங்கில் தலா இரண்டு மையங்களும் துயர் துடைப்பு மையங்களாக ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன.

அவசரநிலை ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகலிடம் அளிக்க சம்பந்தப்பட்ட அனைத்து நிவாரண மையங்களும் தயார் நிலையில் இருப்பதாக டத்தோ பண்டார் டத்தோ ஜோஹரி அனுவார் கூறினார்.

பேரிடர் காலங்களில் உணவு விநியோகிப்பு மையங்களாகச் செயல்படக்கூடிய டேவான் பூச்சோங் இண்டா, டேவான் பூச்சோங் ப்ரிமா மற்றும் டேவான் கமேலியா புத்ரா ஹைட்ஸ் ஆகிய மூன்று இடங்களை சமூக நலத் துறை வாயிலாக தாங்கள் அடையாளம்  கண்டுள்ளதாக அவர் சொன்னார்.

கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது உணவு விநியோக மையம் சுங்கை பூலோவில் மட்டுமே இருந்தது. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்த காரணத்தால் நிவாரண மையங்களுக்கு உணவு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது என்றார் அவர்.

எம்.பி.எஸ்.ஜே. பல்நோக்கு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சியைப் பார்வையிட்டப் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் உதவி ஆணையர் வான் மஸ்லான் வான் மாமாட்டும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

60 மண்டபங்கள் மற்றும் பாலாய் ராயா தவிர்த்து மாநகர் மன்ற நிர்வாகத்தின் கீழ் உள்ள 79 அரசுக்கு சொந்தமான பள்ளிகளையும் தற்காலிக நிவாரண மையங்களாக மாற்ற தனது தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் ஜோஹரி கூறினார்.


Pengarang :