ECONOMYMEDIA STATEMENTPBT

இன்று ஒன்பது இடங்களில் மலிவு விற்பனை

ஷா ஆலம், நவ 22- மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள அத்தியாவசியப் பொருள்களின் மலிவு  விற்பனை இன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை 9 இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த ஏசான் ராக்யாட்  விற்பனை இடங்கள் சுங்கை பாஞ்சாங் சட்டமன்றத்தில் உள்ள புக்கால் பாடி பாரிட் சங்காட் மற்றும் பெர்மாத்தாங் தொகுதியின் பிளாக் எஸ் சவா செம்படான் சமூக மண்டபத்திலும் நடைபெறும்.

பின்வரும் இடங்களிலும் விற்பனை நடைபெறுகிறது:

• புத்ரி சென்டர் பார்க், புத்ரி பார்க் (குவாங் தொகுதி)

• துன் பேராக் பிளாட்ஸ் ( ரவாங் தொகுதி)

• எங்காங் அபார்ட்மெண்ட் ( தாமான் டெம்ப்ளர் தொகுதி)

• கம்போங் லாபு லஞ்சுட் ( சுங்கை பீலேக் தொகுதி)

• ஜாலான் டவுன்ஸ்ட்ரீம் 1, தாமான் ஆங்சானா ஹிலிர் ( பாண்டன் இண்டா தொகுதி)

• கம்போங் ஸ்ரீ அமான் பல்நோக்கு மண்டபம் (ஸ்ரீ செர்டாங் தொகுதி)
• தாமான் துன் தேஜா அபார்ட்மெண்ட், ஆலம் இம்பியான் ( சுங்கை கண்டிஸ் தொகுதி)

கடந்த செப்டம்பர் 6 முதல் நடைபெறும் இந்த மக்கள் மலிவு விற்பனைத் திட்டத்தில் சந்தையை விட 30 சதவீதம் குறைவான விலையில் சமையல் பொருட்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு பொதுமக்களுக்கு கிட்டும்.

இந்த மலிவு விற்பனையில்  நடுத்தர கோழி 10.00 வெள்ளி விலையில்  இறைச்சி 10.00 வெள்ளிக்கும்  பி கிரேடு முட்டை ஒரு  தட்டு 10.00 வெள்ளிக்கும் விற்கப்படும்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  விற்பனையில் மீன் 6.00 வெள்ளிக்கும்  5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் மற்றும் 5 கிலோ அரிசி  அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

 அனைத்து 56 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 160 இடங்களில்  மலிவு விற்பனையை நடத்த   மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது. 

பொதுமக்கள் பி.கே.பி.எஸ். சமூக ஊடகங்கள் வாயிலாக  அல்லது https://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் வாயிலாக  மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் பற்றிய தகவல்களை அறிந்து  கொள்ளலாம்

Pengarang :