ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGORYB ACTIVITIES

ட்விட்டரில் புகார்களைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள்  இரண்டு சாலைகள் சரிசெய்யப்பட்டன

ஷா ஆலம், டிச.7: ட்விட்டரில் பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து மேலும் இரண்டு சாலைகளை மாநிலச் சாலை பராமரிப்பு நிறுவனமான இன்ஃப்ராசெல் எஸ்டிஎன் பிஎச்டி (இன்ஃப்ராசெல்) சரி செய்துள்ளது.
புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சிப்பாங் மற்றும் கோம்பாக் மாவட்டங்களில் இரு சாலைகள் சரிசெய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவம்பர் முழுவதும், ஜாலான் புக்கிட் படாக் மற்றும் ஜாலான் படாங் ஜாவா, பெட்டாலிங், ஜாலான் கிரிஸ் 1, கோலா சிலாங்கூர் மற்றும் ஜாலான் பிடி 1 பாகன் தெராப், பஞ்சாங் பெடேனா, சபாக் பெர்ணம் உள்ளிட்ட பல மாநிலச் சாலைகள் சீரமைக்கப்பட்டன.
சாலையில் சேதம் ஏற்பட்டால்  ட்விட்டரில் ட்வீட்களை பதிவேற்றுவதன் மூலம் தொடர்ந்து புகார்களை தெரிவிக்குமாறு அந்நிறுவனம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக, டத்தோ மந்திரி புசார், ட்விட்டர் மூலம் சேதமடைந்த சாலைகளைப் பற்றி புகார் அளிக்குமாறு பொதுமக்களை ஊக்குவித்துள்ளார்.
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சிலாங்கூரில் சாலை சேதத்தைப் பற்றி புகார் அளிக்க ட்விட்டரைப் பயன்படுத்துவது எளிமையான செயல்முறையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

Pengarang :