Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari bercakap kepada media selepas melawat kejadian tanah runtuh di Kampung Sungai Pusu, Gombak pada 12 Disember 2022. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

மந்திரி புசார் பத்தாங் காலி நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 92 பேரின் குடும்பங்களுக்கும் அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்

ஷா ஆலம், டிச 24- கிறிஸ்துமஸ் விடுமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில் அண்மையில் பத்தாங் காலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 92 பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

மாநில, மத்திய அரசுகளுக்கிடையே தற்போது காணப்படும் அணுக்கமான ஒத்துழைப்பின் வாயிலாக பருவநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக் கூடிய திட்டங்களை விரைந்து மேற்கொள்வதற்கு அரிய வாய்ப்பு சிலாங்கூருக்கு கிடைக்கும் எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு மலேசியர்கள் குறிப்பாக சிலாங்கூர் மக்கள் தயாராகி வரும் இவ்வேளையில் இவ்வாண்டில் கடந்து வந்த கடுமையான பாதையை நினைவுக் கூர்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த ஆண்டில் கற்ற படிப்பினைகளை பாடமாக கொண்டு புதிய ஆண்டில் கால் எடுத்து வைப்போம், நடப்பு ஆண்டில்  பெற்ற அனுபவங்கள், நம்பிக்கையுடன் அடுத்த ஆண்டை தொடங்க  நமக்கு உதவட்டும்  என்றார் அவர்.


Pengarang :