ECONOMYMEDIA STATEMENT

மாநிலம் முழுவதும் 300 எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்த வெ.25 லட்சம் ஒதுக்கீடு

உலு லங்காட், மே 6- மாநிலம் முழுவதும் 300 எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்துவதற்கு ஆட்சிக்குழு வாயிலாக மாநில அரசு 25 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் அந்த விளக்குகளைப் பொருத்தும் பணி இவ்வாரம் தொடங்கி வரும் ஜூன் மாதம் முற்றுப்பெறும் என்றும் அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

முதல் கட்டமாக 31 சட்டமன்றத் தொகுதிகளில் உயர் திறன் கொண்ட 31 எல்,இ.டி. விளக்குகள் பொருத்தப் பட்டதாகக் கூறிய அவர், இன்னும் சில தொகுதிகளில் அந்த விளக்குகளைப் பொருத்த வேண்டியுள்ளதாகச் சொன்னார்.

மேலும் 25 தொகுதிகளில் இந்த விளக்குகள் இன்னும் பொருத்தப்படவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் தலா 10 விளக்குகளைப் பொருத்த விருக்கிறோம். சில தொகுதிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கூடுதல் விளக்குகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம் என்றார் அவர்.

ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் 600 எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்துவதற்காக 50 லட்சம் வெள்ளியை அரசு செலவிடுகிறது என்று நேற்று இங்கு நடைபெற்ற உலு லங்காட் மாவட்ட நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இருள் சூழ்ந்த இடங்கள் இந்த விளக்குகளால் தற்போது ஒளி பெற்றது குறித்து வட்டார மக்கள் தங்களின் மகிழ்ச்சியைப் வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகாலையில் வேலைக்குச் செல்லும் மற்றும் இரவு நேரங்களில் வீடு திரும்பும் பொது மக்களுக்கு இந்த விளக்குகள் பெரிதும் பயனாக உள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :