ECONOMYNATIONAL

கார்னிவெல் மற்றும் மைபியூச்சர் அகப்பக்கம் வாயிலாக 16,865 பேர் வேலை வாய்ப்பினைப் பெற்றனர்

கிள்ளான், மே 6- இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வரை நாடு
முழுவதும் நடைபெற்ற கார்னிவெல் கெர்ஜெயா எனும் வேலை  வாய்ப்புச்
சந்தை மற்றும் மைபியூச்சர் அகப்பக்கம் வாயிலாக 16,865 பேர் வேலை
வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
இவ்வாண்டு இறுதிவாக்கில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் எனத்
தாங்கள் எதிர்பார்ப்பதாக சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் (சொக்சோ)
வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமால் கூறினார்.
கடந்தாண்டு இந்த சேவைகளைப் பயன்படுத்தி 295,044 பேர் வேலை
வாய்ப்பைப் பெற்றுள்ளதை தரவுகள் காட்டுவதாக அவர் சொன்னார்.
கிள்ளானில் இன்றும் நாளையும் நடைபெறும் சிலாங்கூர் கார்னிவெல்
கெர்ஜாயா மைபியூச்சர் வேலை வாய்ப்புச் சந்தை குறித்து பேசிய அவர்,
இந்த இரு நாள் நிகழ்வில் சுமார் 7,000 வேலை வாய்ப்புகள்
வழங்கப்  படுவதாகத் தெரிவித்தார்.
மாநில அரசின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இந்த வேலை வாய்ப்புச்
சந்தையில் நிதி, உற்பத்தி, ஹோட்டல், மற்றும் சில்லறை வணிகம்
உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 38 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன என்று
அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த வேலை வாய்ப்புச் சந்தைதைய மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார்
இன்று காலை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். சமூக,
பொருளாதாரம், சமூக நலன் மற்றும் தொழிலாளர் திறன் மேம்பாட்டுத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவும் இந்நிகழ்வில்
கலந்து கொண்டார்.


Pengarang :