ECONOMYEKSKLUSIFMEDIA STATEMENTPENDIDIKANSAINS & INOVASI

ஷா ஆலம் அரங்க நிர்மாணிப்பு குறித்து தவறானத் தரவுகளைத் தரும் எதிர்க்கட்சிகள்- அமிருடின் சாடல்

ஷா ஆலம், ஆக 5- ஷா ஆலம் விளையாட்டரங்க மறு நிர்மாணிப்பு தொடர்பில் அவதூறுகளையும் பொய்யானத் தகவல்களையும் பரப்பி வரும் பெரிக்கத்தான் நேஷனல் செயலை மந்திரி   புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சாடினார்.

எதிர்க்கட்சியினர் குறிப்பிடும் 320 கோடி வெள்ளி செலவு என்பது அந்த அரங்கைச் சுற்றியுள்ள 70 ஏக்கர் பகுதியையும் மேம்படுத்துவதற்கு மேம்பாட்டாளர் பரிந்துரைத்த தொகையை பிரதிபலிக்கிறது என்று அமிருடின் விளக்கினார்.

அந்த விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு உண்டாகும் செலவுத் தொகை கடந்த 2022ஆம் ஆண்டு நான் கூறியது போல் 80 கோடி முதல் 90 கோடி வெள்ளி வரை மட்டுமே பிடிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

பெரிக்கத்தான் நேஷனல் கட்சி கொள்கை ரீதியான அம்சங்களில் கவனம் செலுத்தவில்லை. மாறாக, அவதூறுகளை மட்டுமே பரப்பி வருகிறது என்று அவர் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறினார்.

இம்மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக பெரிக்கத்தான் நேஷனல் கட்சி ஷா ஆலம் விளைளயாட்டரங்க மறு நிர்மாணிப்பை கையில் எடுத்துள்ளதோடு அதன் நிர்மாணிப்புக்கான செலவு குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளது.

ஷா ஆலம் விளையாட்டரங்க மறுநிர்மாணிப்புத் திட்டத்தை மலேசியன் ரிசோர்சஸ் கார்ப்ரேஷன் பெர்ஹாட் நிறுவனம் மேற்கொள்கிறது. அரசாங்க-தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கு மாநில அரசின் நிதி பயன்படுத்தப்படாது.


Pengarang :