SELANGOR

ஹிஜ்ரா கடன் திரும்ப செலுத்தும் அட்டவணை மறுசீரமைப்பு

ஷா ஆலம், பிப் 28: நிதிச் சிக்கல்களை எதிர்கொள்ளும் தொழில் முனைவோருக்கு நிதி செலுத்தும் அட்டவணையை மறுசீரமைக்கும் திட்டத்தை யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) வழங்குகிறது.

சம்பந்தப்பட்ட தொழில் முனைவோர் அருகிலுள்ள ஹிஜ்ரா அலுவலகக் கிளையில் மாதாந்திர கடன் தவணைகளைச் மறுசீரமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“உங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் அட்டவணையை மறுசீரமைக்க உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.

“மேலும், தகவலுக்கு 18 சிலாங்கூர் ஹிஜ்ரா கிளைகளில் உள்ள அதிகாரியைத் தொடர்பு கொள்ளவும்” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

http://mikrokredit.selangor.gov.my/ மூலம் தொழில்முனைவோர் தங்கள் நிதி இருப்பை இணையத்தில் சரிபார்க்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

“நிதித் தவணைகளை திருப்பிச் செலுத்துவதில் பொறுப்பாக இருக்கும் தொழில் முனைவோர் அர்ப்பணிப்பை ஹிஜ்ரா பெரிதும் பாராட்டுகிறது.

“உங்கள் நிதித் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவது மற்ற தொழில் முனைவோருக்கு அவர்களின் வணிகத்திற்கான மூலதனத்தைப் பெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தது.

87,090 ஹிஜ்ரா தொழில்முனைவோரில் மொத்தம் 78 சதவீதம் பேர் நிறுவனம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களை கால அட்டவணையில் தொடர்ந்து செலுத்துகின்றனர்.

சிறிய அளவில் வியாபாரம் செய்ய அல்லது தங்கள் தொழிலை விரிவுபடுத்த விரும்புவோருக்கு இந்த நிறுவனம் மூலதன உதவியை வழங்குகிறது.


Pengarang :