ANTARABANGSA

காஸாவுக்கு 280 கோடி அமெரிக்க டாலர் உடனடி நிதித் திரட்டும் திட்டத்தை ஐ.நா. தொடக்கியது

நியூயார்க், ஏப் 18 – ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்கு 282.2 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான உடனடி நிதி திரட்டும் நடவடிக்கையை  மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம்  புதன்கிழமை தொடங்கியது என்று சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு ஜெருசலம் உட்பட காஸா மற்றும் மேற்குக் கரையில் உள்ள 31 லட்சம் மக்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் உதவி வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அது கூறியது.

இதற்கு பதிலுக்கு கள இயக்க நிலைமையில் பெரிய மாற்றங்களைக் காண வேண்டும். மனிதாபிமான அமைப்புகள் காசா மற்றும் மேற்குக் கரை முழுவதும் உள்ள உதவி தேவைப்படும்  மக்களை பாதுகாப்பான  முறையில் சென்றடைவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று அலுவலகம் கூறியது.

எங்களுக்கு வட மற்றும் அஷ்டோத் துறைமுகம் உள்பட  காசாவிற்குள் செல்ல அதிக நுழைவாயில்கள்  மற்றும் விநியோக வழிகள் தேவை என்று அந்த அலுவலகம் கூறியது.

காசாவிற்குள் உதவிப் பணியாளர்கள்  நுழைவதற்கான  விசாக்கள் மற்றும்  அனுமதி ஆகியவற்றோடு  நெகிழ்வான நிதி மற்றும் முக்கியமான மனிதாபிமானப் பொருட்களைக் கொண்டு வருவதற்கான ஒப்புதல் ஆகியவை அவர்களுக்குத் தேவை என்று அது மேலும் கூறியது.


Pengarang :