SELANGOR

பொது வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு RM5.21 மில்லியன் ஒதுக்கீடு

உலு சிலாங்கூர், ஏப் 18: உலு சிலாங்கூரில் 10க்கும் மேற்பட்ட பொது வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லங்களுக்கு நன்கொடை வழங்கவும் மொத்தம் RM5.21 மில்லியன் அனுப்பப்பட்டது.

மேடான் செலேரா, ராசா பொதுச் சந்தை, தாமான் தாசிக் மில்லினியத்தில் உள்ள பொது வசதிகளைச் சீர் செய்தல் மற்றும் சாலைகளை மேம்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் அடங்கும் என்று வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சர் கூறினார்.

அனைத்து நிதிகளும் உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் மற்றும் அவற்றை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள கிராம சமூக நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  ஙா கோர் மிங் விளக்கினார்.

“இந்த ஏற்பாடு குடியிருப்பாளர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காகும். மேலும்,  இந்த நடவடிக்கை உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மற்றும் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு நல்வாழ்வை கொண்டுவர உதவும்.

“தற்போது உள்ள சமய  கட்டிடங்களை பழுது பார்ப்பதற்காக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு  RM127,050 நன்கொடையாக வழங்கியதோடு, குழுவின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான இங்குள்ள தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் சங்கத்திற்கு RM10,000 அனுப்பினோம்.

“பாழடைந்த சமயக் கட்டிடங்களைச் சரிசெய்வதற்காகத் தேவ சியாவ் காங் மற்றும் டெவி லீ மா விசுவாசிகள் சங்கத்திற்கு RM250,000 வழங்கவும் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது” என்று அவர் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.


Pengarang :