ECONOMYHEALTHMEDIA STATEMENTPBTSELANGOR

செந்தோசா தொகுதியில் முகநூல் வழி கோவிட்-19 பரிசோதனை குறித்த அறிவிப்பு 

கிள்ளான் ஜூன் 1_ செந்தோசா சட்டமன்ற நிலையில் நேற்று நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் முகநூலை  தொடர்பு சாதனமாக  பயன்படுத்தினார்.

மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த நிகழ்வு குறித்து பொதுமக்கள் தெளிவான தகவலைப் பெறுவதற்கு தாம் சமூக ஊடகத்தை பயன்படுத்தியதாக அவர் சொன்னார்.

இந்த இலவச பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்வது தொடர்பான அடிப்படை தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கு இந்த அணுகுமுறை பெரிதும் துணை புரிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

சோதனைக்கு வரும் பொதுமக்கள் அரை மணி நேரத்தில் தங்கள் பணியை முடித்துக் கொண்டு திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த மூன்று தினங்களாக முகநூல் வழி பிரசார நடவடிக்கையை மேற்கொண்டு வந்தோம். குறிப்பாக பரிசோதனை தினமான நேற்று இதன் தொடர்பில் நேரடி ஒளிபரப்பும் செய்தோம் என்றார் அவர்.

இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தியதன் பலனாக நேற்று காலை 7.30 மணிக்கே சுமார் 200 பேர் மண்டபத்தின் வெளியே வரிசையில் காத்திருந்தனர் என்று அவர் சொன்னார்.

தாமான் கிளாங் ஜெயா மண்டபத்தில் நடைபெற்ற செந்தோசா தொகுதி நிலையிலான கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தின் முதல் நாளான இன்று கோத்தா கெமுனிங் மற்றும் சுங்கை காண்டீஸ் தொகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த பரிசோதனை இயக்கம் நடைபெறுகிறது.


Pengarang :