卫生总监丹斯里诺希山
ECONOMYHEALTHNATIONALPBTSELANGOR

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் நேரடி பங்கேற்பு குறைக்கப்பட வேண்டும்- சுகாதா அமைச்சு

கோலாலம்பூர், ஜூலை 29- நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நேரடியாக பங்கேற்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு கூட்ட நேரமும் குறைக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு மக்களவை சிறப்புக் கூட்டத் தொடர் விவகாரங்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்த பரிந்துரையை சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடப்பு எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் பின்பற்றி சீராக நடைபெறுவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை துணை புரியும் என்று அவர் சொன்னார்.

சுகாதார அமைச்சு நிலைமையை அணுக்கமாக கண்காணித்து வருவதோடு காய்ச்சல் மற்றும் நோய்த் தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களை உடனடியாக சோதிப்பதற்கு ஏதுவாக சுகாதார குழுவும் தேசிய பொது சுகாதார ஆய்வு பிரிவும் அங்கு தயார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றத்தில் 104 பேருக்கு விரைவு ஆண்டிஜென் கருவி மூலம் எச்சில் வழி கோவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும்  அவர்கள் அனைவருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :