ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகம் 99.5 சதவிகிதம் சரிசெய்யப்பட்டது,

கோலாலம்பூர், அக்டோபர் 16 – கிள்ளான் பள்ளத்தாக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் வழங்கல் மறுசீரமைப்பு இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 99.5 சதவீதத்தை எட்டியுள்ளது என்று பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்.டி.என் பிஎச்.டி (ஆயர் சிலாங்கூர்) கூறியது.

 

உலு சிலாங்கூர், கோலா லங்காட், ஷா ஆலம், கோலா சிலாங்கூர், பெட்டாலிங், கோம்பாக் மற்றும் கோலாலம்பூர் ஆகிய ஏழு பகுதிகளில் நீர் வழங்கல் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், கிள்ளான் பிராந்தியத்தில் மீட்பு விகிதம் 99.6 சதவிகிதமாக உள்ளது, அதன் ஐந்து பகுதிகளான மேரு, அமான் பெர்டானா, காப்பார், பண்டார் பாரு, புக்கிட் ராஜா மற்றும் கம்பங் புலாவ் இண்டாவில் மறுசீரமைப்பு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

 

“ஆயர் சிலாங்கூர் நீர் விநியோகத்தை இன்னும் பெறாத பகுதிகளில் நீர் விநியோகத்தை உறுதிப்படுத்த வேலை நடக்கிறது” என்று இன்று பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

ஆயர் சிலாங்கூர் இன்று இரவு 9 மணிக்கு முழு நீர் மீட்பு எதிர்பார்க்கப் படுவதாக அது கூறியது. ஆயர் சிலாங்கூரின்அறிவிப்பு படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகத்தின் இடையூறு மற்றும் மறுசீரமைப்பின் காலம் பயனீட்டு வளாகத்தின் தூரம் மற்றும் விநியோக அமைப்பின் நீர் அழுத்தத்தைப் பொறுத்து மாறுபடும்.

எல்லா இடங்களும்  முழு மீட்சியை அடைய பயனீட்டாளர்கள் நீரை  கவனமுடன் சிக்கனமாக பயன்படுத்த கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என அதன் அறிக்கையில் ஆயர் சிலாங்கூர்  கேட்டுக் கொண்டது.

 


Pengarang :