ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

வர்த்தக உரிமத்தை புதுப்பிக்க நடமாடும் முகப்பிடச் சேவை- எம.பி.எஸ்.ஜே. ஏற்பாடு

ஷா ஆலம், டிச 5- சுபாங் ஜெயா வர்த்தகர்கள்  பொதுச் சந்தைகள், காலை மற்றும் இரவு சந்தைகள் மற்றும் உணவு விற்பனை மையங்களுக்கான வர்த்தக உரிமத்தை  டிசம்பர் 24 வரை நேரடியாக நடமாடும் முகப்பிடச் சேவை மையங்களில் புதுப்பிக்கலாம்.

அந்தந்த மண்டலங்களுக்கு ஏற்ப 2022 ஆண்டிற்கான வணிக உரிமங்களை வர்த்தகர்கள் செலுத்துவதற்கு ஏதுவாக கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் இரண்டு இடங்களில் அந்த நடமாடும் முகப்பிடச் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாநகர் மன்றம் கூறியது.

 நவம்பர் 29 முதல் டிசம்பர் 13 வரை யு.எஸ்.ஜே. 7 பல்நோக்கு மண்டபத்தில் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி  இந்த முகப்பிடம்  திறந்திருக்கும்.

இதற்கிடையில், எம் பி.எஸ்.ஜே. ஸ்டேடியம் செர்டாங் ஜெயா, ஸ்ரீ கெம்பாங்கனில் உள்ள முகப்பிடம் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் 24  ஆம் தேதி வரை செயல்படும் என்று மாநகர் மன்றம் முகநூல் வழி வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்துள்ளது.

Pengarang :