ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

புகார் கிடைத்த 24  மணி நேரத்தில் மூன்று சாலைகள் சீரமைப்பு-இன்ஃப்ராசெல் தகவல்

ஷா ஆலம், 4 அக்- மாநில சாலை பராமரிப்பு நிறுவனமான இன்ஃப்ராசெல் சென். பெர்ஹாட் (இன்ஃப்ராசெல்) சபாக் பெர்ணம் மற்றும் கோல சிலாங்கூர் மாவட்டங்களில் மேலும் மூன்று சாலைகளை சீரமைத்துள்ளது.

டிவிட்டரில் பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் மூன்று சாலைகளும்  சீரமைக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

 ஜாலான் ராஜா மூசா, கம்போங் ஜாலான் லாமா பாஞ்சாங் பெடேனா, சுங்கை பெசார், சபாக் பெர்ணம் ஆகிய பகுதிகளில் சாலைகளை சீரமைக்கும் பணி கடந்த திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 

முந்தைய நாள், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள கம்போங் புக்கிட் பெலிம்பிங்கில் உள்ள ஜாலான் ராஜா மூசாவில் இன்ஃப்ராசெல் நிறுவனம் 'சாலை துப்புரவாளர்'  முறை மூலம் சாலையைச் சுத்தம் செய்தது.

கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி   கோல சிலாங்கூரில் உள்ள ஜாலான் தெலுக் பியா கானானில் 'கோல்ட் இன் ப்ளேஸ் ரீசைக்ளிங்' (சி.ஐ.பி.ஆர்.) முறையைப் பயன்படுத்தி சாலை செப்பனிடப்பட்டது.

 கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கோம்பாக் மற்றும் கோல சிலாங்கூர் மாவட்டங்களில் மேலும் இரண்டு பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டன.

கோம்பாக் மாவட்டத்தின்  ஜாலான் செலாயாங்-கெப்போங்,  மற்றும் கோல சிலாங்கூர் மாவட்டத்தின் பத்து 53, ஜாலான் லாமா சிலாங்கூர்  ஆகியவையே சீரமைக்கப்பட்ட  அவ்விரு சாலைகளாகும் என அது தெரிவித்தது.

அதற்கு முந்தைய நாள்  தஞ்சோங் காராங், ஜாலான் ஹெட்வொர்க்கில் செம்மண் மூலம் சாலையோரங்களில் உள்ள பள்ளங்களை மூடி சமன்படுத்தும் பணியை  இன்ஃப்ராசெல் மேற்கொண்டது.

சேதமடைந்த சாலைகள் தொடர்பான தகவல்களை #namajalan #daerah என்ற ஹேஷ்டேக்குடன் டிவிட்டரில்  பதிவேற்றம் செய்வதன் மூலம் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Pengarang :