ECONOMYMEDIA STATEMENTSELANGOR

செமிஞ்சியே தீபாவளி விற்பனை விழா 2022 – மாநில அரசுடன் ஒரு கூட்டு முயற்சி

சமூக நலன் மற்றும் தொண்டு மேம்பாட்டு அமைப்பு மற்றும் சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு ), MPKj மண்டலம் 21 கவுன்சிலர்கள் & செமிஞ்சியே சட்டமன்ற தொகுதி இந்திய சமூகத் தலைவர் ஆகியோர் இணைந்து “சிலாங்கூர் அலை” என அழைக்கப் படும் விற்பனை விழாவை செமிஞ்சியே Semenyih நகரில் நடத்தவுள்ளது.

அக்டோபர் 14, 2022 முதல்  23, 2022 வரை 10 நாட்களுக்கு காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செமிஞ்சியே Semenyih தீபாவளி 2022 விற்பனைத் திருவிழாவின் அமைப்பு, கோவிட்-19 தொற்று நோய்களின் போது பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வணிகத் துறையின் மறுமலர்ச்சி மற்றும் வணிக ஊக்கமளிப்பதாக சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப நடத்தப்படும் வணிக விழாவாகும்.

விற்பனை விழாவில் வர்த்தகர்கள், MPKj அனுமதியை மட்டும் பெற்று இருக்க வேண்டும்.  தீபாவளியுடன் இணைந்து இந்திய தொழில் முனைவோருக்கு கடன் i-Seasonal Loan Scheme வழங்கப்படுவதுடன்,  விற்பனை பொருட்களுக்கு இலவச விளம்பரம் மற்றும் பல சலுகைகள் ஏற்பாடு செய்யப் படுகிறது.

அதுமட்டுமின்றி  முறுக்கு சுற்றும் சமையல் நிகழ்ச்சி, மருதாணி ஓவியப் போட்டி, கோலம் ஓவியப் போட்டி, உருமி மேளம், பாட்டு & நடனம், “உள்ளூர் கலைஞர்களை சந்தித்தல், வாழ்த்துதல்”, அதிர்ஷ்டக் குலுக்கல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மகிழ்விக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், மேலும் விரைவில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையுடன் இணைந்து விற்பனையை அதிகரிப்பதற்கும் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு இது பல்வேறு சாதகமான வாய்ப்பை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. இது குறித்து விவரம் பெறவும், பங்கு கொள்ளவும் கீழ்காணும் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.

இராமச்சந்திரன் A/L அர்ஜூணன் கவுன்சில் உறுப்பினர் மண்டலம் 21 MPKJ
நடேசன் A/L கன்னியசீலன் இந்திய சமூக தலைவர் செமிஞ்சியே சட்டமன்ற தொகுதி

ராஜேந்திரன் குமார் முனுசாமி சிலாங்கூர் அலை ஆலோசகர்

விஷ்ணு தேவ் A/L  லெட்சுமணன் சிலாங்கூர் அலைத் தலைவர்


Pengarang :