ECONOMYMEDIA STATEMENTPBT

குடியிருப்பாளர்களுக்கு  47,495 இலவச குப்பைத் தொட்டிகள்- கோல லங்காட் நகராண்மைக் கழகம் வழங்கும்

கோல லங்காட், பிப் 1- கோல லங்காட் மாவட்டத்தில் உள்ள வரி செலுத்துவோர் மற்றும் பதிவு பெற்ற குடியிருப்பாளர்களுக்கு 47,495 நடமாடும் குப்பைத் தொட்டிகளை  கோல லங்காட் நகராண்மைக் கழகம் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கி வழங்கவுள்ளது.

இந்த குப்பைத் தொட்டிகளை விநியோகிக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் வரை கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அமிருள் அஜிசான் அப்துல் ரஹிம் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் 120 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொண்ட குப்பைத் தொட்டிகளை விநியோகிப்பதற்கு நகராண்மைக் கழகம் 53 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியைச் செலவிடுவதாக அவர் தெரிவித்தார்.

கோல லங்காட் மாவட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கும் நகராண்மைக் கழகத்தில் வரி செலுத்துவோருக்கும் இந்த குப்பைத் தொட்டிகள் இலவசமாக வழங்கப்படும் என்றார் அவர்.

இங்குள்ள மோரிப் கடற்கரையில் நேற்று நடைபெற்ற குப்பைத் தொட்டிகளை வழங்கும் மற்றும் துப்புரவு இயந்திரத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வுக்கு தலைமை தாங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோல லங்காட் மாவட்டத்தில்  24 மண்டலங்கள் உள்ளன. அந்த மண்டலங்களைப் பிரதிநிதிக்கும் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் மூலம் இந்த குப்பைத் தொட்டிகளை விநியோகிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :