ECONOMYMEDIA STATEMENT

கம்போடியா சீ போட்டி நிகழ்வுகள் ஆர்.டி.எம். வாயிலாக நேரடி ஒளிபரப்பு

கோலாலம்பூர், மே 6- கம்போடியாவில் நடைபெறும் 32வது சீ போட்டியை ஆர்.டி.எம். நேற்று தொடங்கி வரும் மே 17ஆம் தேதி வரை ஒகே மற்றும் சுக்கான் ஆர்.டி.எம். அலைவரிசைகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யும்.

இவ்விரு அலைவரிசைகள் வாயிலாக மூன்று கட்டங்களை உள்ளடக்கிய ஆறு மணி நேரத்தில் 43 நேரடி ஒளிரப்புகளை ஆர்.டி.எம். அஞ்சல் செய்யும் என்று மலேசிய ஒளிபரப்புத் துறை கூறியது.

காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும் முதல் கட்ட ஒளிபரப்பில் போட்டியின் தினசரி நிலவரங்கள் ஒளிபரப்பாகும். இரண்டாம் கட்ட ஒளிபரப்பு பிற்பகல் 2. மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் மூன்றாம் கட்ட ஒளிபரப்பு இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் இடம் பெறும்.

இவை தவிர சுக்கான் ஆர்.டி.எம். அலைவரிசை வாயிலாக காலை 8.30 மணி முதல் காலை 9.30 மணி வரை நிகழ்வுகளின் மறு ஒளிபரப்பு இடம் பெறும்.

இந்த சீ போட்டியின் ஏகபோக ஒளிரப்பாளரான ஆர்.டி.எம்.  போட்டியின் தொடக்க முற்றும் நிறைவு நிகழ்வுகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யும்.

 இந்த ஒளிபரப்பு பணிகளைக் கவனிப்பதற்காக 17 பேரடங்கிய ஆர்.டி.எம். பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நோம் பென்னில் உள்ளனர்.


Pengarang :