ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழி மித்ரா உதவியை  உலு லங்காட் தொகுதி இந்தியர்கள் வரவேற்றனர்

செய்தி ; சு.சுப்பையா
செமிஞ்சே. அக்.8-  இந்திய சமுதாய நிகழ்வுகளில், கல்வி மற்றும்  தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான அம்சங்கள் விடுபடுவதில்லை.  உலு லங்காட் தொகுதி இந்தியர் சமூக பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கை   குழு மித்ரா உதவியுடன் ஏற்பாடு செய்த நிகழ்விலும்  தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு  முன்னுரிமை வழங்க தவறவில்லை.

இன்று உலு லங்காட் தொகுதி இந்தியர்கள் சமூக பொருளாதார மேம்பாட்டு குழு மற்றும் உலு லங்காட் மக்கள் நீதி கட்சி இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்விலும்  கல்வி, கலாச்சாரம்,  தேச பற்றுதலை  போதிக்கும்  அம்சங்கள்  கொண்ட மாணவர்கள்  நிகழ்வுகள்  சேர்க்கப்பட்டு  இருந்தன. மாணவர்களுக்கு  தேசிய தின  ஆடை அலங்கார  போட்டிகளையும், வர்ணம் தீட்டும் போட்டி சொல்வதெழுதல்,  போட்டிகள் நடத்தினர். இப்போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 50 மாணவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். முதல் பரிசு மிதிவண்டிகள் ( சைக்கிள்கள் ) வழங்கி சிறப்பித்தனர். மேலும் இப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா மாணவர்களும் ஆறுதல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது

மாணவர்களுடன்  வந்திருந்த பொற்றோர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும்  உற்சாகமூட்டும் டாக்டர் காதர் இப்ராஹிம் சொற்பொழிவும்  இடம் பெற்றதாகவும்,  அடுத்து  சிறு தொழில்  பயிற்சிகள் ஏற்பாடு செய்யவுள்ளதாக  ஏற்பாட்டுக் குழு தலைவர்  இராஜன் முனுசாமி கூறினார்.

இந்த நிகழ்வுக்கு நிதி  உதவி வழங்கிய பிரதமர் மற்றும் மித்ரா மற்றும் நாடாளுமன்ற  உறுப்பினருக்கும்  தனது குழுவின் நன்றியை தெரிவித்துக் கொண்ட  அவர், நமது இளைஞர்கள்  இது போன்ற பல பயனுள்ள விளையாட்டு மற்றும் சமூக நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய கூடியவர்கள்.

ஆனால்  நிகழ்ச்சிகள் ஏற்பாடு செலவுகளுக்கு நிதி அளிக்க எவருமில்லை,  நிதி பற்றாக்குறையால், இது போன்ற  நிகழ்வுகளுக்கான  தலைமை ஏற்க நம் இளைஞர்கள் முன் வருவதில்லை.  இதனால் நம் இளைஞர்கள் ஆக்கமும், ஊக்கமும் குன்றி ஒதுங்கி கொள்கின்றனர்  என்றார்.

ஆக இம்முறை மித்ரா வழி  நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள மானியத்தை  பெற்று  நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய எல்லா இடங்களிலும்  உள்ள இளைஞர்களுக்கு  ஒரு சிறந்த வாய்ப்பு  கிடைத்துள்ளது என்றார் அவர்.

இந்திய இளைஞர்களை ஊக்குவிக்க  ஆங்காங்கே இது போன்ற நிகழ்வுகளை நடத்தப்பட வேண்டும்.  இதனால்  நம்  இளைஞர்களை எப்பொழுதும் ஆக்ககரமான நிகழ்வுகளில் ஈடுப்படுத்துவதுடன்.  அரசாங்கத்தின் பல்வேறு  நிகழ்வுகள் குறித்து சமுதாயம் அறிந்துக் கொண்டு சேவையாற்ற முன் வருவார்கள்  என்றார்.


Pengarang :