ECONOMYHEALTHMEDIA STATEMENTPBTSELANGOR

தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள வெ.20 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூன் 9– நோய்த் எதிர்ப்பு சக்தி கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்காக கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை சிலாங்கூர் அரசு தொடக்கவுள்ளது.

இத்திட்டத்தை அமல் செய்ய இருபது கோடி வெள்ளி செலவு பிடிக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த திட்டம் கீழ்க்கண்ட அம்சங்களை உள்ளடக்கியிருக்கும்-

– ஜூன் மாதம் தொடங்கி தடுப்பூசியை கட்டங் கட்டமாக விநியோகிப்பது தொடர்பில் தேசிய மருந்தக ஒழுங்கு முறை பிரிவுடன் நடத்தப்படும் பேச்சுவார்தையை இறுதி செய்வது.

– மூத்த குடிமக்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் தடுப்பூசி பெறுவதை உறுதி செய்வது.

– இளம் தலைமுறையினர் 18 வயதை அடையும் போது அவர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக போதுமான அளவு தடுப்பூசி கைவசம் இருப்பதை உறுதி செய்வது.

– ஆயிரத்திற்கும் மேற்பட்ட  தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவ துறை சார்ந்தவர்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகளை வழங்க மாநில அரசு 55 கோடியே 15 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

மூன்று வியூகங்களின் அடிப்படையில் 25 உதவித் திட்டங்களை உள்ளடக்கிய இந்த கித்தா சிலாங்கூர் 2.00 உதவித் தொகுப்பின் வாயிலாக 16 லட்சம் பேர் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :