ECONOMYHEALTHMEDIA STATEMENTPENDIDIKANSELANGOR

பெட்டாலிங் பெர்டானா மாவட்டத்திலுள்ள 25,000 மாணவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெறுவர்

ஷா ஆலம், அக் 18- பெட்டாலிங் பெர்டானா மாவட்டத்தைச் சேர்ந்த  நான்காம் மற்றும் ஐந்தாம் படிவத்தில் பயிலும் மாணர்வளில் 25,000 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெறவுள்ளனர்.

இளையோருக்கான கோவிட்-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இன்று தொடங்கி இம்மாதம் 29 ஆம் தேதி வரை இந்த தடுப்பூசி செலுத்தப்படும்.

இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெறுவதன் மூலம் மாணவர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பைப் பெறுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்திலுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெறவுள்ளனர். இதன் வழி அவர்கள் தங்கள் கல்வியை வழக்கம் போல் தொடர்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

எனினும், நமது பாதுகாப்புக்கான முதன்மை அம்சமாக விளங்கும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை அவர்கள் தொடர்ந்து கடைபிடித்து வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று காலை இங்குள்ள செக்சன் 7 தேசிய இடைநிலைப்பள்ளிக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

இப்பள்ளி வளாகத்தில் சுமார் அரை மணி நேரத்தைச் செலவிட்ட அவர், மாணவர்களுக்கு முகக் கவசம் மற்றும் கிருமி நாசினியை இலவசமாக வழங்கினார்.

 


Pengarang :