ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPress Statements

பொதுத் தேர்தல் குற்றங்கள் தொடர்பில் 3,483 புகார்களை போலீசார் பெற்றனர்

கோலாலம்பூர், நவ 22- நவம்பர் 4ஆம் தேதி முதல் நேற்று இரவு வரையிலான காலகட்டத்தில் 15வது பொதுத் தேர்தல்  தொடர்பான 3,483 புகார்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன.

அவற்றில் அதிக எண்ணிக்கையில் அதாவது 453 புகார்கள் கெடா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டதாக அரச மலேசிய போலீஸ் படையின் 15வது பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கை இயக்குநர் டத்தோஸ்ரீ ஹசானி கசாலி கூறினார்.

கெடாவைத் தொடர்ந்து சிலாங்கூர் (449), பகாங் (433), கிளந்தான் (432),  பேராக் (335) , ஜோகூர் (304)  நெகிரி செம்பிலான் (236), கோலாலம்பூர் (224),  பெர்லிஸ் (214),  சபா (120), சரவாக் (88),  பினாங்கு (85), திரங்கானு (63) மற்றும் மலாக்கா (47) ஆகிய மாநிலங்கள் உள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இப்புகார்கள் தொடர்பில் மொத்தம் 515 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன  அவற்றில் 180 அறிக்கைகள் துணைப் பப்ளிக் புரோசிகியூட்டர் அலுவலகத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ன என்று அவர் கூறினார்

தேர்தல் குற்றங்கள் தொர்பில் ஆறு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு நான்கு நபர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :