ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

மாநில அரசின் நிதியுதவி வீட்டு உபகரணங்களை வாங்க உதவும்- பாதிக்கப்பட்டவர்கள் கருத்து 

ஷா ஆலம், ஜன 9- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசினால் வழங்கப்படும் 1,000 வெள்ளி நிதியுதவி வெள்ளத்தில் சேதமடைந்த வீட்டு உபகரணங்களை வாங்க உதவும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

மாநில அரசின் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டம் அறிவிக்கப்பட்ட மூன்றாவது நாளில் தமக்கு 1,000 வெள்ளி உதவித் நிதி கிடைத்ததாக பஸ் ஓட்டுநரான கே.சங்கர் வயது 49) கூறினார்.

இந்த தொகையைக் கொண்டு வீட்டுக்குத் தேவையான மின்சாரப் பொருள்களை தாம் வாங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட எங்களின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த நிதியுதவியை வழங்கிய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் சொன்னார்.

மாநில அரசின் இந்த உதவித் தொகைக்காக தாம் காத்திருப்பதாக கூறிய வர்த்தகரான வி.சி. மீனா (வயது 50), அப்பணத்தைக் கொண்டு வீட்டு உபகரணங்களை வாங்கவுள்ளதாக கூறினார்.

எங்களைப் போன்ற பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கும் அரசாங்கம் சிறிய அளவில் உதவிகளை வழங்கும் எதிர்பார்க்கிறோம். காரணம் வர்த்தகம் மட்டுமே எங்களின் ஒரே வாழ்வாதாரமாக உள்ளது என்றார் அவர்.

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் 10 கோடி வெள்ளி நிதியில் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை மாநில அரசு கடந்த மாதம் 21 ஆம் தேதி அறிவித்தது.


Pengarang :